அந்தர் பெல்ட்டி அடித்த மாரி செல்வராஜ்.. ரஜினியை கழட்டிவிட்டு கார்த்தியை கமிட்டாகிய மாமன்னன்.!

By Ranjith Kumar

Published on:

இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வடிவேலு இணைந்த காம்போவில் உருவான மாமன்னன் படம் வெற்றிக் பின், வாழை என்ற படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இப்படம் முன்பாகவே எடுக்க வேண்டும் என்று சொல்லி இருந்தவர், பல படங்களில் பிசியாக வேலை செய்து தற்போது இப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பின்பாக விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அவர்களை வைத்து படம் இயக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.

இப்படம் வரும் மார்ச் கடைசி வாரத்தில் இருந்து படப்பிடிப்பு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுனா விருது பெற்ற கணேசன் என்ற கபடி வீரனின் வாழ்க்கை சரித கதையை மையமாக வைத்து இப்படம் எடுக்க உள்ளதாக மாறி செல்வது முன்னதாகவே தெரிவித்திருந்தார். இதற்காக கடந்த சில மாதம் காலமாக துருவ் விக்ரம் அவர்களுக்கு கடுமையாக கபடி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது உண்மை சம்பவத்தை தழுவி எடுப்பதால், இது உண்மையான விஷயங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதற்காக மிகக் கடுமையான பயிற்சி பெற்று வருகிற துருவ் விக்ரம். இப்படம் 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

   

ஆனால் உதயநிதி அவரின் கடைசி படமாக மாமன்னன் படம் அமைய வேண்டும் என்பதற்காக மாறி செல்வராஜ் அவர்களை வலியுறுத்தி இப்படத்தை நிறுத்தி வைத்து மாமன்னன் படத்தில் மிக பிஸியாக வேலை செய்து கொண்டிருந்தார். அதன் பின்னதாக தற்போது வாழை படம் முடிந்தபின் துருவ் விக்ரமின் பெயரிடாத மூன்றாவது படத்தை இயக்கு உள்ளார். ஆனால் ரஜினியின் 172 வது படத்தை மாரி செல்வராஜ் அவர்கள் இயக்க உள்ளேன் என்று முன்பாகவே தெரிவித்திருந்தார்.

தற்போது ரஜினியை வேறு படங்களில் பிஸியாக நடித்து வருவதால், இப்படத்தில் நடிப்பதற்கு கால நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இருப்பதினால் மாரி செல்வராஜ் அவர்கள் அப்படியே திரும்பி கார்த்தியின் பக்கம் வந்துள்ளார். தற்போது இருக்கும் படங்களை முடித்துவிட்டு, கார்த்தியும், பிரேம்குமார் அவர்களின் இயக்கத்தில் நடித்த கொண்டிருக்கும் படத்தை முடித்தபின், கார்த்தியுடன் இணைந்து மாரி செல்வராஜ் படம் இயக்கு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
Ranjith Kumar