கடந்த ஒரு வருட காலமாக பிரீ- ப்ரொடக்ஷனில் முடங்கி கிடக்கும் படம் தான் “STR 48”. இப்படத்தை 2020 ஆம் ஆண்டு துல்கர் சல்மான், ரித்து வருமா, ரக்சன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வரவேற்பு பெற்ற “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பட இயக்குனர் “தேசிங் பெரியசாமி” அவர்கள் தான் STR படத்தை இயக்கு உள்ளார். இப்படத்தை ராஜ் கமல் ஃபிலிம் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி அவர்கள் இயக்கி ST சிலம்பரசன், கீர்த்தி சுரேஷ் அவர்களின் நடிப்பில் உருவாக உள்ளது.
இருப்பினும் இப்படத்தில் கமல்ஹாசன் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் (Cameo roll) வர உள்ளதாக தகவல் கசிந்து இருக்கிறது. இப்படத்திற்கான அபிஷியல் டைட்டில் இன்னும் வெளிவரவில்லை, ஆனால் இப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சில புகைப்படங்களும் வெளியிட்டு இருந்தார்கள். அது வெளிவந்து மிகப் பிரபலமாக ரசிகர் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தது. அதற்கிடையில் சிம்பு பெரிய மாவீரர்கள் படைக்கு முன்னால் சிங்கம் போல் காட்சியளித்து, ராஜா தோற்றத்தில் அவர்களை எதிர்த்து நிற்பது போல் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்கள். இது STR 48 படத்திற்கான அப்டேட் என்று ரசிகர்கள் பலரும் கொண்டாடி வந்தார்கள்.
இது படத்திற்கான வீடியோ கிளிப்பிங் தான் என்று ட்ரெண்ட் செய்து வந்த நிலையில், தற்போது அது Casagrand கம்பெனியின் விளம்பரத்திற்காக சிம்பு அவர்கள் நடித்து வெளிவந்தது என்று தெரிந்ததும், ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. VFX, CG மூலமாக அதை சிறப்பாக வடிவமைத்து படத்தில் வரும் காட்சி போலவே அமைந்திருந்ததால், அது படம் என்று நினைத்து பின்பு விளம்பரம் என்று ஏமாந்த ரசிகர்கள், இருந்தாலும் இதே போல் STR 48வது படம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று தனது கோரிக்கைகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து வந்தார்கள். ஆனால் எவ்வளவு இவர்கள் பேசினாலும் தற்போது பலகாலமாக படத்தின் முன் வேலைகள்( pre- production) மட்டும் தான் நடந்து கொண்டிருக்கிறது.
படத்தை தற்போது பிப்ரவரி மாதம் கடைசியில் துவங்க உள்ளதாக தெரிவித்த பட குழு, தற்போது வரை படத்தைப் பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள். தற்போது இந்தியா வந்த சிம்பு அவர்கள் காசா கிராணைட் விளம்பரத்தை முடித்தவுடன் மீண்டும் துபாய்க்கே போய் தன் உல்லாச பயணத்தை ஆரம்பித்து விட்டாராம். இவர் எப்பொழுது தமிழ்நாடு வர எப்போது ராஜ்கமல் ஃபிலிம் இப்படத்தை துவங்கி திரைக்குக் கொண்டு வரப் போகிறதோ என்று பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.