“அண்ணா சினிமாவுக்கு என்ன செய்யப்போறீங்க…?” – விஜய்யை நேரில் சந்தித்து கேள்வி கேட்கத் துடிக்கும் மாஸ்டர் மகேந்திரன்…!

By Swetha on ஆடி 3, 2026

Spread the love

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் மின்வெட்டு மற்றும் விஜய் குறித்து பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, நெட்டிசன்களின் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளானது. “மின்வெட்டு ஏற்பட்டால் கேள்வி கேட்காமல் அட்ஜெஸ்ட் செய்யுங்கள்; விஜய் அண்ணாவை கேள்வி கேட்காதீர்கள்” என்று அவர் பேசிய உடல்மொழியும், பாணியும் பலரை அதிருப்தியடைய செய்தது. பின்னர் இதற்கு அவர் விளக்கம் அளித்ததை அடுத்து, சமூக வலைதளங்களில் இந்த சர்ச்சை ஓரளவுக்கு ஓய்ந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் விஜய் குறித்து மாஸ்டர் மகேந்திரன் பேசியுள்ள கருத்துக்கள் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றன. சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தனக்கு அரசியல் அல்லது தேர்தலில் எந்த ஈடுபாடும் இல்லை என்றும், விஜய் மேடையில் பேசும்போது ஒரு வாக்காளராக கீழே நின்று தான் கவனிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரைச் சந்திக்கும் போது “அண்ணா சினிமாவுக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று மட்டுமே தன் டார்கெட்டாகக் கேட்பேன் எனக் கூறியுள்ளார்.

   

தொடர்ந்து விஜய்யின் நிர்வாகத் திறமை குறித்துப் பாராட்டிய மகேந்திரன், படப்பிடிப்புத் தளத்தில் யாருக்கு என்ன பிரச்சினை என்பதை விஜய் கேட்காமலேயே தெரிந்து வைத்திருப்பார் என்று நெகிழ்ந்துள்ளார். அவருடைய படம் என்றால் யாருக்குமே சம்பள பாக்கி இருக்காது என்றும், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய அவர், இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்றும் மாஸ்டர் மகேந்திரன் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.