BREAKING:பரபரப்பின் உச்சக்கட்டம்… நீதிமன்ற வாசலில் அனிதா ராதாகிருஷ்ணன் வீசிய ‘அரசியல் குண்டு’…6 மணி நேரம் விசாரனைக்கு பின் நடந்த ட்விஸ்ட்…!

By Visaka on ஆடி 3, 2026

Spread the love

தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனின் விவகாரம் தற்போது புதிய திருப்பத்தைப் பெற்றுள்ளது. சுமார் 6 மணி நேரத் தீவிர விசாரணைக்குப் பிறகு, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களைச் சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன், தன்னை பதவியை ராஜினாமா செய்யுமாறு போலீசார் கடுமையாக நிர்பந்திப்பதாகக் கூறி புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை, போலீசார் தன்னிச்சையாக ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, இந்த வழக்கின் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்திருப்பதோடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.