அம்மாடியோவ்… அவ்ளோ பெரிய பாம்பா?… குடியிருப்புக்குள் புகுந்த பிரம்மாண்ட மலைப்பாம்பு… பதறி ஓடிய கிராம மக்கள்… வனத்துறை அதிரடி மீட்பு…!

By Swetha on ஆவணி 16, 2026

Spread the love

மீரட் கிராமம் ஒன்றில், குடியிருப்பு வீட்டை நோக்கிப் பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக ஊர்ந்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் அருகே பெரிய பாம்பு ஒன்று வருவதைக் கண்ட கிராம மக்கள் அச்சத்தில் அலறிடித்து ஓடியதோடு, அதைத் தங்கள் மொபைல் போன்களிலும் படம்பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உதவியுடன் தீவிர முயற்சிக்குப் பிறகு அந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பாம்பு மிகவும் நீளமாகவும் எடையுள்ளதாகவும் இருந்ததால், அதைச் பிடிப்பதற்கு வனத்துறையினர் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

   

பின்னர், பிடிக்கப்பட்ட அந்த மலைப்பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டது. இருப்பினும், குடியிருப்பு பகுதிகளுக்குள் இதுபோன்ற ஆபத்தான வனவிலங்குகள் அடிக்கடி நுழைவது அப்பகுதி மக்களின் நிம்மதியைக் குலைப்பதாகவும், இதற்கு நிரந்தரத் தீர்வு காண வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.