“அய்யோ சாவு இப்படியா வரணும்?”…. சார்ஜ் போட்டபடி தூங்கிய மாணவன்…. தாயார் நேரில் பார்த்த கொடூரம்…. திருவள்ளூரில் கலங்கவைக்கும் சம்பவம்….!

By Nanthini on ஆவணி 16, 2026

Spread the love

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் கற்குழாய் சாலைப் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் செந்தில் – கவிதா தம்பதியினரின் மூத்த மகன் சீனிவாசன். மணவாள நகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த இவர் , விடுமுறை நாளான நேற்று தனது நண்பனின் மடிக்கணினியை வாங்கி வந்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

விளையாடும் போது மடிக்கணினியில் மின்சாரம் தீர்ந்துபோனதால், அதனைச் சார்ஜரில் இணைத்துத் தரையில் வைத்துவிட்டு அதன் அருகிலேயே சீனிவாசன் உறங்கியுள்ளான். வெளியே சென்றுவிட்டு பிற்பகல் 2 மணியளவில் வீடு திரும்பிய தாய் கவிதா, மகனின் கையில் மின்சாரம் தாக்கிய தழும்புடன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

   

மருத்துவமனையில் சீனிவாசனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, மாணவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மருத்துவமனையில் சீனிவாசனின் இளைய தம்பி ரித்தி கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் உரைய வைத்தது. நண்பனின் மடிக்கணினியைச் சார்ஜ் போட்ட நிலையில் மின்சாரம் தாக்கி 11-ஆம் வகுப்பு மாணவன் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.