சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ். 50 வயதான இவர் தொழிலதிபராக இருக்கிறார். வாரத்துக்கு ஒருமுறை சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு சென்று இவர் மசாஜ் செய்வது வழக்கம். அந்த கிளப்பில் பணியாற்றி ஆண்ட்ரியா என்ற ஆங்கிலோ இந்திய மசாஜ் அழகியோடு இவருக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளார்கள். அப்போது கடந்த மாதம் 29ஆம் தேதி அன்று ஆண்ட்ரியா, சூளைமேட்டில் வசிக்கும் தனக்கு தெரிந்த ரேகா சாவித்திரி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார் என்றும் அங்கு வந்தால் வித்தியாசமான உல்லாசத்தை அனுபவிக்கலாம் என்றும் அங்கு உங்களுக்கு இன்ப விருந்து காத்திருக்கிறது என்றும் அழைப்பு விடுத்துள்ளார். இதை உண்மை என்று நம்பி சார்லஸ் அந்த சொகுசு விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு ரேகா சாவித்திரி என்ற பெண்ணும் இரண்டு ஆண்களும் இருந்துள்ளார்கள்.
விடுதிக்குள் சென்றவுடன் அங்கிருந்த ஆண்கள் இருவரும் தங்களை போலீஸ்காரர் என்று அறிமுகம் செய்து பிறகு சார்லசை சரமாரியாக தாக்கியுள்ளார்கள். இதில் சார்லஸ் மயங்கி விழுந்துள்ளார். இதை பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 20 பவுன் தங்கச் செயின், கைச்செயின் ஆகியவற்றை அந்த டிப் டாப் ஆசாமிகள் பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் அவருடைய வங்கி கணக்கிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அபகரித்துவிட்டு அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த விடுதியில் சென்று விசாரணை நடத்தியதில் மசாஜ் அழகி ஆண்ட்ரியாவும் அவருடைய காதல் கணவர் கோகுல கிருஷ்ணனும் தான் இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டது என்பது தெரியவந்தது.
இணைத்த நிலையில் அவர்களை தேடும் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் மசாஜ் மோசடி ராணி ரேகா சாவித்திரி, போலீஸ்காரராக நடித்த நவீன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஆண்ட்ரியாவையும் அவருடைய காதல் கணவர் கோகுலகிருஷ்ணனையும் போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான…
மாரடைப்பு என்பது உலக அளவில் மனித உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு நோயாகும். இதய தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுக்குத்…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் அவசரப் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ…
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியதற்கான அதிர்ச்சி பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளிப்படையாக விளக்கமளித்துள்ளார்.…
மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் கேட்டுக்கொண்டதாக மதிமுக பொதுச்செயலாளர்…