தீபாவளி பண்டிகை நாளில் நாட்டின் பல்வேறு இடங்களில் அரங்கேறிய கொலை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றச்செயல்களைத் தடுக்க தமிழகக் காவல் துறை அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் 36 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 43 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பிற முக்கிய மாவட்டங்களிலும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் பழைய குற்றவாளிகளைப் பிடித்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காக்கவும் இரவு நேரப் ரோந்துப் பணிகள் மற்றும் வாகனச் சோதனைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டா பகுதியில் தீபாவளி பண்டிகையின்போது நூதனமான முறையில் யுபிஐ பண மோசடி நடைபெற்றுள்ளது. பீபால் சௌராஹா…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள சந்திபான் காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், இயங்கும் மோட்டார் சைக்கிளின்…
தெலங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய பள்ளி மாணவனை, திருமணமான ஒரு பெண்ணும் அவரது காதலனும் சேர்ந்து…
பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில், ஏற்கனவே பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், மீண்டும் கொடூரமாகத் தாக்கப்பட்டு வீட்டின் மாடியிலிருந்து…
பெங்களூருவில் தனது கள்ளக்காதலைத் தொடர்ந்து எதிர்த்து வந்த 24 வயது மகனை, கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாயே…
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…