அச்சச்சோ… தீபாவளி நாளில் நடந்த கொடூரம்…. அடுத்தடுத்து அதிரடி கைது…. ரவுடிகளுக்கு போலீஸ் போட்ட ஸ்கெட்ச்….!

By Nanthini on கார்த்திகை 10, 2026

Spread the love

தீபாவளி பண்டிகை நாளில் நாட்டின் பல்வேறு இடங்களில் அரங்கேறிய கொலை சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றச்செயல்களைத் தடுக்க தமிழகக் காவல் துறை அதிரடி ஆக்‌ஷனில் இறங்கியுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, தலைநகர் சென்னையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் ஒரே நாளில் 36 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 43 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலத்தின் பிற முக்கிய மாவட்டங்களிலும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் மற்றும் பழைய குற்றவாளிகளைப் பிடித்து தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சட்டம்-ஒழுங்கைப் பேணிக் காக்கவும் இரவு நேரப் ரோந்துப் பணிகள் மற்றும் வாகனச் சோதனைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும், இதுபோன்று குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறைத் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.