அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான “நமது எம்ஜிஆர்” முன்னாள் ஆசிரியரும், ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளன மருது அழகுராஜ், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜ் திமுக செய்தி தொடர்பு குழு துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் வருட தேர்தலில் சிவகங்கையின் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் மருது அழகுராஜ்.
