பிரிகிறதா அதிமுக – பாஜக கூட்டணி..? புதிய குண்டை தூக்கிப்போட்ட EX அமைச்சர் கடம்பூர் ராஜு..!!

By Soundarya on புரட்டாதி 26, 2025

Spread the love

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, கூட்டணி எல்லாம் தேர்தல் நேரத்தில் தான் முடிவாகும். தேர்தலுக்கு இன்னும் கொஞ்சம் காலம் உள்ளது. கடைசி நேரத்தில் புதிய கட்சிகள் பல அதிமுக கூட்டணிக்கு வரலாம். தற்போது இருக்கும் கூட்டணி கூட பிரியலாம். எதுவும் நடக்கும் என்பதற்காக இதை சொல்கிறேன்.

திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்பதை நாங்கள் ஏற்கிறோம். இரண்டாம் இடத்திற்கு இரண்டு கட்சிகளுக்கும் இடையே போட்டி. அதைத்தான் நடிகர் விஜய் சொல்லி வருகிறார். இரண்டு கட்சிகளில் எந்த கட்சி எதிர்க்கட்சியாகும் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும் என்று கூறியுள்ளார்.