நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பாக இந்திய “பெரும்பான்மைவாத அரசியலும் சிறுபான்மையினர் உரிமையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஊட்டியில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டு பேசினார் . அப்போது பேசிய அவர், “வடமாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மதம் மாறுபவர்கள் கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும். இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் பாஜக முழுமையாக காலூன்ற அதிமுகவினரை கையில் எடுத்துள்ளது. பாஜக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெகவினர்க்கு ஒரே இலக்கு திமுக தான். 2026 ஆம் வருடத்திற்கு பிறகு சீமான், விஜய்க்கு எதிர்காலம் இருக்காது. மராட்டியத்தில் கட்சி உடைத்தது போல இங்கும் பல கட்சிகளை பாஜக உடைத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
