16 வயதில் குழந்தை திருமணம் செய்து கர்ப்பம்…. திருமணத்தை மறைக்க ரூ.50000 லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டர்… அடுத்து நடந்த பரபரப்பு சம்பவம்…!

Spread the love

தர்மபுரி பகுதியை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் 16 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்பந்தத்தோடு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை தொடர்ந்து அவரை பெற்றோர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போதுதான் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததையும் சிறுமி கர்ப்பமானதையும் மருத்துவர்கள் கண்டறிந்தன. உடனே இது குறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறையினர் மருத்துவமனையில் விசாரணை நடத்தி பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (50) சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்யாமல் இருக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது தொடர்பாக தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

பிறகு லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆறின் அறிவுரையின் பெயரில் ரசாயன பவுடர் தடவிய ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் வீரமாளிடம் சிறுமியின் தாயார் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்தால் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு… 2,482 வங்கிப் பணியிடங்கள்… மாதம் ரூ 48,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க…!

பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…

7 மணத்தியாலங்கள் ago

CM விஜய் தினமும் 20 மணிநேரம் வேலை செய்கிறார்… இணையத்தை கலக்கும் வைரல் பதிவு…!

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…

7 மணத்தியாலங்கள் ago

விவசாயிகளுக்கு ஜாக்பாட்… கடன் முழுவதும் தள்ளுபடி… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!

கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கடவுளே என்ன இது… ஒரே வெடிப்பு… அணுவெடியாய் மாறப்போகும் மினி கேஸ் கேனிஸ்டர்… கதறித் துடிக்கும் குடும்பம்… ஷாக்கிங் வீடியோ…!

மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ… மிஷினை விட்டு ஓடுங்க… நொடியில் ஆபத்தை உணர்ந்து… சக தொழிலாளர்களைக் காப்பாற்றிய ஊழியர்… அதிர்ச்சி வீடியோ…!

தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, ​​எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…

8 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னை விட்டுடுங்கடா… கதறிய வாலிபரை நடுரோட்டில்… இழுத்துச் சென்று இரும்புத் தடியால் அடித்து… சிறுநீர் கழித்த கொடூரம்… உ .பி – யில் அதிர்ச்சி சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…

9 மணத்தியாலங்கள் ago