actor Vijay

நடிகர் விஜய்க்கு எதிராக களம் இறக்கப்பட்ட இயக்குனர் மாரி செல்வராஜ்… உதயநிதி ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச் – தேர்தல் களத்தில் ஒர்க் அவுட் ஆகுமா?

By Elango on மாசி 24, 2026

Spread the love

இப்போது தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் சூடு பிடிக்க துவங்கி விட்டது. திமுகவுக்கு எதிராக தவெக மல்லுக்கட்டி வருகிறது. நடிகர் விஜய்க்கு ஆதரவான மக்கள் செல்வாக்கு ஆளுங்கட்சி திமுவுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பது மறுக்க முடியாத உண்மை. இந்த சூழலில் நடிகர் விஜய் கட்சி நிகழ்ச்சிக்கு வரும்போது, உங்க விஜய் உங்க விஜய் உயிரென வரேன் நான் என்ற பிரசார பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆகியுள்ளது. இந்த பாடல் கூட்டத்தில் ஒலித்தாலே தவெக தொண்டர்கள் உற்சாகமாகி விடுகின்றனர்.

இதே போல் திமுக தேர்தல் பிரசார கூட்டங்களிலும் ஒரு வைப்பை ஏற்படுத்தும் துள்ளலான ஒரு பாடல் காட்சியை உருவாக்கி தர வேண்டும் என்று இயக்குனர் மாரி செல்வராஜிடம் துணை முதல்வர் ஸ்டாலின் கேட்டுள்ளார். ஏற்கனவே மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார். அடுத்து இன்பன் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் படத்தையும் மாரி செல்வராஜ் தான் இயக்க உள்ளார். மாரி செல்வராஜ் உதயநிதியின் நெருக்கமான நண்பராக இருப்பதால் இப்படி ஒரு பொறுப்பை அவருக்கு உதயநிதி தந்துள்ளார். எனவே அனல் பறக்கும் திமுக பிரசார பாடலை உருவாக்கும் பணியில் மாரி செல்வராஜ் மும்முரமாக இருந்து வருகிறார்.