தனுஷ் உடன் இணைந்து நான் எடுக்கப்போற அடுத்தப்படம் இந்த மாதிரி தான் இருக்கும்… மாரி செல்வராஜ் ஓபன் டாக்…

By Meena on செப்டம்பர் 29, 2024

Spread the love

மாரி செல்வராஜ் தமிழ் திரைப்பட இயக்குனரும் எழுத்தாளரும் ஆவார். தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் மாரி செல்வராஜ். ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரை எழுதியவர் மாரி செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

   

தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிம் உதவி இயக்குனராக 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்தார். 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியாதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மாரி செல்வராஜ்.

   

முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து திரும்பி பார்க்க வைத்தார் மாரி செல்வராஜ். அடுத்ததாக தனுஷ் உடன் இணைந்து கர்ணன் 2023 ஆம் ஆண்டு மாமன்னன் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். சமீபத்தில் இவர் இயக்கிய வாழை திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.

 

அடுத்ததாக துருவ் விக்ரமுடன் பைசன் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படத்தின் 75 சதவீதம் சூட்டிங் முடிந்தது என்று கூறப்படுகிறது. இதற்கு அடுத்ததாக தனுஷ் உடன் மறுபடியும் படம் பண்ண போவதாக அறிவித்திருந்தார் மாரி செல்வராஜ்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் தனுசுடன் தான் இயக்க போகும் அடுத்த படத்தை பற்றி பேசியிருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், அடுத்ததாக தனுஷ் உடன் இணைந்து நான் எடுக்கப் போகும் திரைப்படம் வரலாற்று சம்பந்தமா படமாக இருக்கும். அது கொஞ்சம் டைம் எடுத்து பொறுமையா நல்ல ரிசல்ட் கொடுக்கிற படமா எடுக்கலாம்னு தான் பிளான் பண்ணி இருக்கோம் என்று ஓபனாக பேசி இருக்கிறார் மாரி செல்வராஜ்.