சசிகுமார் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இயக்குனர்கள் பாலா மற்றும் ஆமீர் ஆகியோருடன் இணைந்து சேது, மௌனம் பேசியாதே, ராம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் சசிகுமார்.
பின்னர் 2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் திரைப்படத்தை இயக்கி அதில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இயக்குனராகமும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சசிகுமார். முதல் படமே வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. அடுத்ததாக 2019 இல் இவர் இயக்கிய ஈசன் திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை. அதனால் நடிப்பின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சசிகுமார்.
நடிகராக சசிகுமார் சுந்தரபாண்டியன், குட்டி புலி, தாரை தப்பட்டை, வெற்றிவேல், கொடி வீரன், அயோத்தி, கருடன், நந்தன் ஆகிய திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இவரது திரைப்படத்தில் குடும்ப செண்டிமெண்ட் அதிகமாக இருக்கும். குடும்பத்துடன் வந்து பார்க்கும்படி சசிகுமாரின் படங்கள் இருக்கும்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட சசிகுமார் சுப்பிரமணியம் 2 படம் எடுத்தா எப்படி இருக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் முதலில் சுப்ரமணியம் 2 படம் எடுக்கலாம் என்றுதான் யோசித்து வைத்திருந்தேன். அப்படி எடுப்பதாக இருந்தால் ஓப்பனிங் சீனில் அழகர் செத்துப் போயிடுவான் பரமன் வந்து செத்துட்டதா நம்ம காட்டல.
அதை வச்சு அடுத்ததா ஊருக்குள்ள திருவிழா நடக்கும் நடிகை சுவாதிக்கு கல்யாணம் ஆகி குடும்பத்தோட இருப்பாங்க வெட்டுப்பட்டு அடிபட்ட பரமன் டும்காவோட ஊருக்குள்ள முகமூடிலாம் போட்டு உள்ள வந்து அப்படி கதை கண்டினியூ ஆகுற மாதிரி தான் யோசிச்சேன். அதுக்கு அப்புறம் இது போதும் சுப்பிரமணியத்தோட நிப்பாட்டிக்கலாம் இரண்டாவது வேண்டாம் அப்படிங்கறத நான் முடிவு எடுத்துட்டேன் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் சசிகுமார்.