ராஜ்கமல்-லதா தம்பதிக்கு இவ்ளோ பெரிய பொண்ணு இருக்காங்களா..? வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram on செப்டம்பர் 29, 2024

Spread the love

நடிகர் ராஜ்கமல் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் நடித்து பிரபலமானார். ராஜ்கமல் பச்சை குதிரை, சரோஜா, நவீன சரஸ்வதி சபதம், லிங்கா, சண்டி குதிரை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சீரியல் நடிகை லதா ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

லதா ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்தார். ஒரு கன்னட திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார். நடிகை லதா சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டு ஒலி, திருமதி செல்வம் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த தம்பதியினர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி பங்கேற்றனர்.

   

 

இவர்களுக்கு லாரா, ராகா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ராஜ்கமல் நடிகர் புகழின் மகள் பிறந்தநாள் விழாவில் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ராஜ்கமாலின் மகள் இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரா என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by rajkamal ganesh (@rajkamal.actor)

author avatar
Priya Ram