பேராண்மை படம் பண்ணதுக்கு என்னை எல்லாரும் திட்டினாங்க… மனம் திறந்த ரவி மோகன்…

By admin on தை 20, 2025

Spread the love

ரவி மோகன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி மற்றும் புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை மோகன் தமிழ் சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்தார் மற்றும் இவரது அண்ணன் மோகன் ராஜா இயக்குனராகமும் இருக்கிறார். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ரவி மோகனுக்கு கிடைத்தது. 2002 ஆம் ஆண்டு “ஜெயம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

   

அதைத்தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வம் வந்தார் ரவி மோகன். அதற்குப் பிறகு பல கமர்சியல் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பேராண்மை, பூலோகம், தனி ஒருவன், டிக் டிக் டிக் என பலதரப்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார் ரவி மோகன்.

   

சமீபத்தில் இவர் மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார் ரவி மோகன். தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ரவி மோகன் நடித்த காதலுக்கு நேரமில்லை திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து ஜீனி திரைப்படம் மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது. தற்போது நேர்காணலில் கலந்து கொண்ட ரவி மோகன் தனது திரையுலக அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார்.

 

அப்போது ரவி மோகன் நான் பேராண்மை படத்தில் நடித்ததற்காக எல்லோரும் என்னை திட்டினார்கள் என்று கூறியிருக்கிறார். து என்னவென்றால் நான் பேராண்மை படத்திற்காக என்னுடைய Comfort Zone இல் இருந்து வெளியே வர வேண்டியதாக இருந்தது. அதில் கொஞ்சம் டேனாக கலர் கம்மியாக இருக்க வேண்டும் என்பதால் நான் வெயிலில் எண்ணெய் தேய்த்துக்கொண்டு படுத்திருப்பேன். என்னை பார்த்து என்னுடைய நண்பர்கள் எல்லோரும் நீ வேற பாதையில Deviate ஆகி போற என்று திட்டினார்கள். அப்புறம் என்னுடைய அப்பா நான் அப்படி கருத்து போனத பார்த்து ரொம்ப வருத்தப்பட்டார். ஆனால் படம் வெளியானதுக்கு அப்புறம் நான் பட்ட கஷ்டம் எல்லாம் நல்லது தான் அப்டினு படத்தை பார்த்துட்டு ரொம்ப பாராட்டுனாங்க என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் ரவி மோகன்.