நான் அப்படி இருப்பதையே வெறுக்கிறேன்… முதன்முறையாக மனம் திறந்த இயக்குனர் கௌதம் மேனன்..!

By Soundarya on தை 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தன்னுடைய ஒவ்வொரு படத்தையும் மக்கள் மத்தியில் வித்தியாசமாக காண்பிக்க கூடியவர். காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் படம் எல்லாம் சூர்யாவுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படங்களாகும்.

   

அதனைப் போலவே கமல்ஹாசன், அஜித் மட்டும் தனுஷ் என்ன பலரையும் தன்னுடைய படங்களில் படு ஸ்டைல் ஆக கௌதம் மேனன் காட்டியிருப்பார். ஸ்டைலிஷ் ஆக மட்டுமல்லாமல் தன்னுடைய திரைக்கதை, வசனம் மற்றும் மேக்கிங் மூலம் அசரடிப்பார். இவர் இயக்கிய மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட காதல் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

   

 

இந்நிலையில் பேட்டி ஒன்றி பேசிய இயக்குனர் கௌதம் மேனன், “நான் ஒரு நடிகனாக இருப்பதையே வெறுக்கிறேன். இயக்குநர்களை ‘வேண்டாம்’ என்று சொல்ல முடியாது. இப்போது நான் DDReturns பகுதி-2-ல் நடிக்கிறேன், அது முற்றிலும் வேடிக்கையாக இருக்கிறது & என் கதாபாத்திரம் மட்டுமே சீரியஸானது. நான் அதை முழுமையாக ரசித்து சந்தானத்திற்காக செய்தேன். டிராகன் படத்தில் நடனமாடுவதையும் நான் விரும்பினேன்” என்று கூறியுள்ளார்.