தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான், தனது வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் தற்போது மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதன் மூலம் அவர் தற்போது இந்திய அளவில் பிரபலமாகியும் உள்ளார். அதாவது நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் திரிஷாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. பிரபல வில்லன் நடிகராக வலம் வரும் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி ஆபாசமாக பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாக ரசிகர்களும் பிரபலங்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் ஒரு சில நடிகர் மன்சூர் அலி கானுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலி கானை விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இன்று நடிகர் மன்சூர் அலி கானை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் இருந்து விசாரிக்க அழைத்திருந்தனர். ஆனால் அவர் தற்பொழுது விசாரணைக்கு செல்லவில்லை. அதற்கு அவர் காரணமொன்றை எழுதி கடிதத்தை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘மேன்மை மிகு அம்மையீர், திரைப்பட நடிகை திரிஷா அவர்களை எனது அரசியல் பேட்டியில் இடையநாள் குறிப்பிட, அது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்க, இந்திய தேசிய மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று,
தாங்கள் வழக்கு பதிவு செய்து கு.மு.ச 41 ஏ பிரிவின்படி விசாரிக்க என்னை அழைத்தீர்கள். அம்மா எனது குரல்வளை 15 நாட்களாக தொடர் இருமலாக இருந்து நேற்று மிகவும் பாதிப்படைந்து, பேச மிகசிரமமாக இருப்பதால் நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு நாளை தங்களை சந்திக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வர அனுமதிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டு தற்பொழுது அனுமதி கடிதம் ஒன்றை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ளார். இதோ அந்த கடிதம்…
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…