விஜய்க்கு ஆதரவு… மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி… தமிழக அரசியலில் புதிய திருப்பம்….!

By Nanthini on தை 2, 2026

Spread the love

தமிழக அரசியலில் தீவிரம் காட்டி வரும் விஜய் சினிமாவிற்கு முழுக்கு போட உள்ள நிலையில் அவருடைய நடிப்பில் கடைசி படமாக ஜனநாயகம் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் விஜய் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் விஜய் மக்கள் போராட்டம் செய்யவில்லை என்று இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும் நடிகருமான மன்சூர் அலிகான் கூறியுள்ளார். சென்னை பல்லாவரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, விஜய் அரசியல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். விஜய்யை நானும் முதலில் ஆதரித்தேன்.

ஆனால் பின்பு அவர் யாரால் இறக்கி விடப்பட்டவர் என தெரிய வந்தது. அவர் எம்ஜிஆர் போன்று மக்கள் போராட்டம் செய்து வந்திருந்தால் ஒட்டுமொத்த நாடும் அவரோடு நின்றிருக்கும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் ஒரு சிறந்த நடிகர். அதனால் நடிகராகத்தான் விஜய்யை மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். ஜனநாயகன் விஜயின் கடைசி படம் என்பதால் இனிமேல் அவர் நடிக்க மாட்டார் என அவர் மீது மிகுந்த அன்போடு இருக்கிறார்கள். அதற்காக அரசியலுக்கு அவர் வரக்கூடாது என்றும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை. அவர் களத்தில் இறங்கி போராட வேண்டும். நாங்களும் களத்தில் இருப்போம் என்றார்.