தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், வேலை காரணமாக வெளியூரில் தங்கி இருப்பவர்கள் என அனைவருக்கும் விடுமுறை திட்டமிட ஏற்ற ஆண்டாக அமைய உள்ளது. வார இறுதி நாட்களுடன் அரசு மற்றும் பண்டிகை விடுமுறைகளும் இணையும் வகையில் ஆண்டின் பல மாதங்களில் நீண்ட விடுமுறைக்கு வாய்ப்புள்ளது. ஜனவரி மாதத்திலேயே பல விடுமுறை நாட்கள் வருகின்றன. தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால் ஜனவரி ஐந்தாம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 புதன்கிழமை முதல் ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை வரை நீண்ட விடுமுறையாக அமைந்துள்ளது. அதேசமயம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24 சனிக்கிழமை, ஜனவரி 25 ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜனவரி 26 திங்கள் என மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருகிறது. அதனைப் போலவே அடுத்தடுத்த மாதங்களிலும் இதுபோன்ற தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் 2026 ஆம் ஆண்டில் மொத்தமாக 26 நாட்கள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. வார விடுமுறை உள்ளிட்டவை கணக்கிட்டால் ஜனவரியில் மொத்தம் பள்ளிகளுக்கு 15 நாட்கள் விடுமுறையாகும்.
