தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர் பாக்கியராஜ். தொடர்ந்து 7 வெள்ளி விழா படங்களைக் கொடுத்த ஒரே தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்ற பாக்யராஜ், இந்திய அளவிலேயே திரைக்கதை மன்னன் என்ற பெயரைப் பெற்றவர்.
பல படங்களை இயக்கி அப்போது பீக்கில் இருந்த பாக்யராஜ் 1982 ஆம் ஆண்டு நடிப்பு மற்றும் இயக்கத்தில் நான்கு படங்கள் ரிலீஸாகி நான்குமே சூப்பர்ஹிட் ஆனது. அதன் மூலம் அவர் ஒரு முன்னணி கதாநாயக நடிகனானார். அதன் பிறகு பெரும்பாலும் அவர் ஹீரோவாக நடிக்கவே முன்னுரிமை கொடுத்தார். 80 களில் முன்னணி நடிகராக இருந்த அவர் 90 களில் தனது மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு சொக்கத்தங்கம் மற்றும் பாரிஜாதம் என இயக்குனராக மட்டும் கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படங்கள் பெரியளவில் ஓடாததால் அவரால் இயக்குனராக அதன் பின்னர் தொடர முடியவில்லை. அதன் பின்னர் குணச்சித்திர நடிகராக இப்போது கலக்கி வருகிறார்.
இந்நிலையில் பாக்யராஜ் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சினிமாவில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசியுள்ளார். அதில் “நான் சினிமாவுக்கு வரும் தொழில்நுட்ப ரீதியாக அடிப்படையான சில விஷயங்கள் கூட தெரியாமல்தான் வந்தேன். அப்போதெல்லாம் பாரதிராஜா சார் “டேய், நீயெல்லாம் எப்படிடா சினிமாவுக்கு வந்த?” எனத் திட்டுவார். ஆனால் கொஞ்ச காலத்தில் “இவன்தாண்டா என் பெயரை காப்பாத்தப் போறான்” என சொல்லுமளவுக்கு திறமைகளை வளர்த்துக் கொண்டாராம்.
ஆனாலும் பாக்யராஜுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையிலான உறவு மோதலும் அன்பும் கலந்துதான் இருந்துள்ளது. இதுபற்றி பிரபல இயக்குனர் மனோபாலா ஒரு சுவாரஸ்யத் தகவலைப் பகிர்ந்துள்ளார். அதில் “நான் பாரதிராஜா சாரிடம் சென்றபோது, அவர் மனோஜ் கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி ஒரு படத்தை இயக்க இருந்தார். அப்போது அவர் சொன்ன கதையைக் கேட்டு நான் இது ஓடாது என்றேன். அப்போது நான் அவரிடம் உதவி இயக்குனராக இன்னும் சேரக் கூட இல்லை.
நான் அவரிடம் ‘உங்களிடம் இருந்த பாக்யராஜ் எங்கே?’ எனக் கேட்டேன். அவனை அடித்து விரட்டிவிட்டேன் என்றார். நான் போய் அவரை சமாதானப்படுத்தி அழைத்து வருகிறேன் என்று அவர் இருக்கும் ஹோட்டலுக்கு சென்றேன். அவரும் முதலில் முறுக்கிக் கொண்டு பேசினார். ஆனால் சமாதானப்படுத்தி அழைத்து வந்தேன். அடுத்த மூன்று நாட்களில் அனைவரும் சேர்ந்து உருவாக்கியதுதான் புதிய வார்ப்புகள் திரைக்கதை. அந்த படத்தில் கதாநாயகனாகவும் பின்னர் பாக்யராஜ் நடித்தார்” எனக் கூறியுள்ளார்.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…