மணிரத்தினம் பட ஹீரோயின்ஸ்-ஐ டார்கெட் செய்த பிரபல இயக்குனர்.. இதை யாராவது கவனிச்சீங்களா..?

By Priya Ram on ஜூலை 15, 2024

Spread the love

பிரபல இயக்குனரான மணிரத்தினம் கடந்த 1983-ஆம் ஆண்டு கன்னடத்தில் ரிலீசான பல்லவி அணு பல்லவி என்ற படத்தை இயக்கிய இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். தமிழில் கடந்த 1985-ஆம் ஆண்டு ரிலீசான இதய கோவில் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மௌன ராகம் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தின் மூலமாக பிரபலமானார்.

மணிரத்னம், ஷங்கரின் கூட்டு முயற்சி; இத்தனை இயக்குநர்கள் இணைந்து தொடங்கிய  புதிய தயாரிப்பு நிறுவனம்! | Maniratnam, Shankar and other top directors  started a new ...

   

இதனைத் தொடர்ந்து நாயகன், அக்னி நட்சத்திரம், ரோஜா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ராவணன், ஓ காதல் கண்மணி, செக்க சிவந்த வானம், பொன்னியின் செல்வன் என பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தற்போது உலகநாயகன் கமலஹாசனை வைத்து மணிரத்தினம் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் கூட்டணி சேர்ந்ததால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

   

எனது முதல் படத்திலேயே வெளியேற்றப்பட்டேன்"-நடிகை மதுபாலா வேதனை

 

இதே போல பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் கடந்த 1993-ஆம் ஆண்டு ரிலீசான ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். கடந்த வாரம் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Page 8 - நடிகை மனிஷா கொய்ராலாவின் யாரும் பார்க்காத புகைப்படங்கள்.. – News18  தமிழ்

மணிரத்தினம் படத்தில் ஹீரோயினாக வருபவர்கள் ஷங்கரின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பதை யாராவது கவனித்தது உண்டா..? மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மதுபாலா. இவர் ஷங்கரின் ஜென்டில்மேன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மணிரத்தினம் இயக்கிய பாம்பே படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மனிஷா. இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். அடுத்ததாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் ஐஸ்வர்யா ராய். இவர் சங்கரின் ஜீன்ஸ் திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Aishwarya Rai - அட ஐஸ்வர்யா ராய் நடித்திருக்க வேண்டிய படமா அது?.. ஆச்சரிய  தகவல் இதோ | Aishwarya Rai is the first choice to Jodi Movie - Tamil  Filmibeat