கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நபருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் தனக்கு நான்கு கோடி ரூபாய் வரதட்சனை தர வேண்டும் என்று கேட்ட அந்த நபர் தன்னுடைய மனைவியை தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் கேட்ட பணத்தை கொடுக்காவிட்டால் அந்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை whatsapp மற்றும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு வரதட்சனை கொடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த கணவர் தன்னுடைய மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை whatsapp குழுவில் வைரலாக்கியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அவருடைய புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அந்த பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் அந்தரங்க புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
