அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் 457 மீட்டர் உயர கோபுரம் ஒன்று உள்ளது. இந்த தொலைத்தொடர்பு கோபுரம் உச்சியில், விமானங்களை எச்சரிக்கை செய்யும் சிவப்பு நிற ஒளிரும் விளக்கு பொருத்தும் பணியை கெவின் ஷேமிட்த்(Kevin Schmidt) என்பவர் செய்து வருகிறார்.
இந்த விளக்கை 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டுமென கூறப்படுகிறது. இதற்காக கெவின் ஷேமிட்த்திற்கு 20000 டாலர் (இந்திய மதிப்பின்படி, ரூ. 17.62 லட்சம்) சம்பளம் பெறுகிறார். கெவின் ஷேமிட்த், கோபுரத்தில் ஏறி விளக்கை மாற்றும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த கோபுரத்தின் மேலே செல்ல செல்ல மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசுமாம். கடுமையான பயிற்சி செய்தால் மட்டுமே இந்த வேலையை செய்ய முடியும். இது உலகின் மிக ஆபத்தான வேலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
Kevin Schmidt became known for climbing a 1,500-foot (457-meter) television broadcast tower in South Dakota to change a single light bulb on the top, a job he performed about twice a year & it paid $20,000 per climb.
Could you do this job? 👀 pic.twitter.com/YprYEgG85m
— 𝐓𝐨𝐦𝐦𝐲 𝐁𝐥𝐚𝐳𝐞 (𝐍𝐄𝐖) (@ThxxasBlxze_) September 3, 2025
