“கயிறு சரியா இருக்கா பொண்டாட்டி?” – மனைவியின் மரணத்தை சிரித்தபடி வீடியோ எடுத்த கொடூரக் கணவன்.. அதிர்ச்சியில் உறையவைக்கும் உண்மை….!

Spread the love

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம், ராஜம்பேட்டையில் அரங்கேறியுள்ள ஒரு துயரச் சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. ரவிசங்கர் என்பவருக்கும் லாவண்யா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரவிசங்கர் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, அவரைத் தொடர்ந்து உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் சித்திரவதை செய்து வந்துள்ளார். இந்தத் தொடர் கொடுமைகளால் மனமுடைந்த லாவண்யா, தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து மின்விசிறியில் தூக்கிட முயன்றார்.

ஆனால், ஒரு கணவனாகத் தன் மனைவியைக் காப்பாற்ற வேண்டிய ரவிசங்கர், அதற்கு மாறாக அதிர்ச்சியூட்டும் வகையில் நடந்துகொண்டார். லாவண்யா தூக்கிட முயன்றபோது, பதற்றமடையாமல் தனது செல்போனை எடுத்த அவர், மனைவியின் மரணத்தை வீடியோ எடுக்கத் தொடங்கினார். மேலும், “கயிறு சரியாக இருக்கிறதா?” என்று கிண்டலாகக் கேட்டு, கொடூரமான முறையில் தனது மனைவியைத் தூண்டும் வகையில் பேசி, அந்தத் தற்கொலையை நேரடி ஒளிபரப்பு செய்வது போலப் பதிவு செய்துள்ளார்.

இந்தக் கொடூரத்தின் உச்சக்கட்டமாக, லாவண்யா உயிருக்குப் போராடியபோது, அங்கிருந்த தம்பதியரின் இரு பிஞ்சு குழந்தைகளும் இதை நேரில் கண்டு கதறி அழுதுள்ளனர். குழந்தைகளின் அழுகுரலைப் பற்றியும் கவலைப்படாமல், ரவிசங்கர் தொடர்ந்து வீடியோ எடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மனைவி இறந்த பிறகு, அந்த வீடியோ ஆதாரங்கள் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, இது தற்கொலை அல்ல, கணவனின் தூண்டுதலால் நடந்த கொலை என லாவண்யாவின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், ராஜம்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ரவிசங்கரை கைது செய்துள்ளனர். ஒரு மனித உயிர் தன் கண் முன்னே பிரிவதை வேடிக்கை பார்த்து, அதைப் பதிவு செய்த கணவனின் இச்செயல், மனிதநேயமற்ற தன்மையின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ ஆதாரங்கள் ரவிசங்கருக்கு எதிரான வலுவான சாட்சியாக அமைந்துள்ள நிலையில், இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

6 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

6 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

6 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

6 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

6 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

6 மணத்தியாலங்கள் ago