“கணவரை இழந்த பெண்…” நண்பனை அழைத்து வந்த கள்ளக்காதலன்… இரண்டு பேருடன் ஏற்பட்ட பழக்கம்… கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 23, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாலி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (26) என்பவர், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது நண்பர்களாலேயே அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி – திருச்சி பைபாஸ் சாலையில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்த சின்னராஜுக்கு, கணவரைப் பிரிந்து வாழ்ந்த வெண்ணிலா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கஞ்சா வழக்கில் ராமநாதபுரம் சிறையில் இருந்தபோது பழக்கமான மண்டபத்தைச் சேர்ந்த நம்பி முனீஸ்வரன் (29) என்பவரைச் சின்னராஜ் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வெண்ணிலாவுக்கும் நம்பு முனீஸ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, சின்னராஜைவிட்டுப் பிரிந்து சென்ற வெண்ணிலா, நம்பி முனீஸ்வரனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

   

இது குறித்து ஏற்பட்ட முன்விரோதத்தால், நேற்று நள்ளிரவு காரைக்குடிக்கு வந்த நம்பி முனீஸ்வரன் மற்றும் வெண்ணிலாவின் சித்தி மகனான ராமசாமி (22) ஆகியோர் சேர்ந்து, தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வைத்து சின்னராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டித் தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்து சாலையில் கிடந்த சின்னராஜை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த குன்றக்குடி போலீசார், கொலையில் ஈடுபட்ட நம்பி முனீஸ்வரன் மற்றும் ராமசாமி ஆகிய இருவரையும் வெறும் 30 நிமிடங்களுக்குள் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.