அதிர்ச்சி… போலீசார் முன்னிலையில் பெண் டாக்டருக்கு அறை… மகாராஷ்டிராவில் மருத்துவப் பாதுகாப்பு கோரி… மருத்துவர்கள் அதிரடி போராட்டம்… இணையத்தில் வைரல்…!!

By Swetha on ஐப்பசி 23, 2026

Spread the love

மகாராஷ்டிராவில் உள்ள வர்தா மாவட்டம், ஹிங்குன்காட் பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார மையத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட காதிர் அலி என்ற குற்றவாளி, காவல்துறையினர் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்த போதே டாக்டர் ஸ்ரத்தா பூம்ரே என்ற பெண் மருத்துவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த வெட்கக்கேடான வன்முறைச் செயல் அங்குள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் முன்னிலையே மருத்துவமனைக்குள் ஒரு பெண் மருத்துவர் தாக்கப்பட்டிருப்பது மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் பணியாற்றும் மருத்துவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இல்லை என்பதை இது அப்பட்டமாக வெளிக்காட்டியுள்ளது.

   

https://twitter.com/rameshofficial0/status/2113298316981420358/video/1

   

குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவமனைகளில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பை வலியுறுத்தியும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் வெளிநோயாளர் பிரிவு சேவைகளை முழுமையாக முடக்குவோம் என்று அவர்கள் பகிரங்கமாக எச்சரித்துள்ளனர். மருத்துவக் குழுக்களின் இந்த திடீர் வேலைநிறுத்த அச்சுறுத்தல் பொதுமக்களுக்குப் பெரும் மருத்துவ நெருக்கடியை உருவாக்கியுள்ளது.