“ஒரே ஜாடையில் இருந்ததால் மாற்றி கொன்னுட்டோம்…” பாரில் அரங்கேறிய கொடூரம்… சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 23, 2026

Spread the love

கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளர் முகேஷ் (36) என்பவரின் கழுத்தின் பின்புறம் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி டோல்கேட் அருகிலுள்ள பாரில் முகேஷ் தனது நண்பருடன் மது அருந்திக் கொண்டிருந்த போது, அருகில் மற்றொரு மேசையில் அமர்ந்திருந்த கும்பல் திடீரென முகேஷை கத்தியால் வெட்டியுள்ளது.

இதில் படுகாயமடைந்த முகேஷ் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், நடத்திய தீவிர விசாரணையில் சூர்யா, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கவின், நித்தீஷ், மஞ்சு ஆகிய 3 பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

   

முன்விரோதம் காரணமாக வேறொரு நபரைத் தாக்கத் திட்டமிட்ட கும்பல், அதே தோற்றத்தில் இருந்ததால் முகேஷை ஆள்மாறித் தாக்கியதாகக் கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் கிருஷ்ணகிரி மற்றும் சேலம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.