அழகியுடன் தனி அறையில் உல்லாசம்.. அந்த கோலத்தில் புகைப்படம், வீடியோ எடுத்த கும்பல்… ஆசை ஆசையாய் சென்ற வாலிபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் செல்போன் செயலி மூலமாக அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதற்கு ஆசைப்பட்டு புரோக்கர் ஒருவரை தொடர்பு கொண்டு உள்ளார். அந்த வாலிபருக்கு போன் செய்த புரோக்கர், என் கையில் ஏராளமான அழகான பெண்கள் இருக்கின்றனர், நீங்கள் கோவை காந்தி பார்க் வந்தால் அங்கு இருக்கும் வீட்டில் அழகிகளுடன் தனிமையில் இருக்கலாம் என்று கூறியுள்ளார். புரோக்கர் சொன்ன மறுநிமிடமே இளைஞர் அந்த முகவரிக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் அழகான பெண் ஒருவர் அந்த வாலிபரை வரவேற்றுள்ளார். வீட்டின் உள்ளே சென்று பிறகு அந்தப் பெண்ணுடன் தனி அறைக்கு சென்ற வாலிபர் அங்கு உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது திடீரென வில்லங்கம் வாசல் கதவு வழியாக வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அந்த அரை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தனர். இளம் பெண்ணுடன் அரைகுறை ஆடையுடன் இருந்த அந்த வாலிபருக்கு பெயர் அதிர்ச்சியாக இருந்தது. அந்தக் கோலத்தில் வாலிபரை அவர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளனர். பிறகு வாலிபர் பதறிப்போர் யார் என்று கேட்டதும் இந்த போட்டோவை சமூக வலைத்தளத்தில் பரப்பாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு இடத்தை காலி பண்ணு என்று சினிமா பானியில் மிரட்டியுள்ளனர். இளம் பெண்ணுடன் அரைகுறை ஆசையுடன் இருக்கும் போட்டோ வெளியே வந்தால் மானம் போய்விடும் என்று பதறிய அந்த வாலிபர் வேறு வழியில்லாமல் தன்னிடமிருந்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களுடைய வங்கி கணக்குக்கு அனுப்பினார்.

   

பிறகு அந்த கும்பல் வாலிபரின் மனைவியின் போன் நம்பரை வாங்கிக் கொண்டு அவரை விடுவித்தனர். பிறகு வாலிபரின் மனைவிக்கு போன் செய்து கணவர் வேறு பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் போட்டோ மற்றும் வீடியோ இருப்பதாக கூறி அந்த பெண்ணையும் மிரட்டி ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை பறித்துள்ளனர். வாலிபர் வீட்டுக்கு வந்ததும் புகைப்படத்தை காட்டி அந்த கும்பல் பணம் பறிப்பதை அவருடைய மனைவி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர் மனைவியை அழைத்துக் கொண்டு சென்று போலீசில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அந்த புரோக்கரை தேடி வருகின்றன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.