RAIN ALERT: 15 மாவட்டங்களில் மதியம் ஒரு மணி வரை வெளுக்கும் கனமழை… இன்று முதல் 6 நாட்களுக்கு வந்த அலர்ட்…!

By Nanthini on கார்த்திகை 22, 2025

Spread the love

தமிழகத்தில் இன்று மதியம் ஒரு மணி வரை 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு ஒட்டிய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

அதே சமயம் மத்திய வங்க கடல் மற்றும் அந்தமான் கடல், தென் கிழக்கு கடலாகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். அதேபோல செங்கல்பட்டு, சென்னை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மதியம் ஒரு மணி வரை மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆறு நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.