உத்திரபிரதேசம் மாநிலம் ஸ்ராவஸ்தி மாவட்டம் தாரா கிராமத்தை சேர்ந்த ரபீக் என்ற இளைஞருக்கு திருமணம் ஆகி மனைவியும் மூன்று பிள்ளைகளும் இருந்தனர். மும்பையில் வசித்து வந்த இவர் குடும்பத்துடன் கடந்த வாரம் தரா கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சனிக்கிழமை இரவு கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரபீக் தன்னுடைய மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளையும் கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் ஐந்து பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
