150 கிமீ வேகம்…. தடுப்பு சுவரைத் தாண்டி பள்ளத்தில் மின்னல் வேகத்தில் பாய்ந்த கார்… 5 பேர் துடிதுடித்து பலி… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

By Nanthini on கார்த்திகை 16, 2025

Spread the love

இந்தியாவில் இப்போதெல்லாம் நடக்கக்கூடிய சாலை விபத்துக்கள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மிகக் கடுமையான சாலை விபத்துக்கள் தினம் தோறும் நடந்து கொண்டிருக்கின்றன. அப்படி டெல்லி மற்றும் மும்பை விரைவு சாலையில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரக் காட்சி அங்கிருந்த சிசிடிவி யில் பதிவாகியுள்ளது.

காவல்துறை தகவலின் படி டெல்லியில் இருந்து மும்பை நோக்கி சென்ற கார் மகி நதி பாலம் அருகே திடீரென்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. சுமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற கார் உலோக தடையை உடைத்து நேராக பள்ளத்தில் விழுந்தது. இது விபத்தின் தாக்கம் எவ்வளவு மோசமானது என்பதை காட்டுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரில் 15 வயது சிறுவனும் 70 வயது முதியவரும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.