உத்திரபிரதேசம் மாநிலத்தில் மருமகளுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை தட்டிக் கேட்ட மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் பிஜ்னோரில் உள்ள நங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பவருடைய மகன் சவுரப் (30). இவருடைய மனைவிக்கும் சுபாஷுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருநாள் இருவரும் தனியாக இருப்பதை சவுரப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தன்னுடைய தந்தையுடன் தகராறு செய்துள்ளார்.
இதனால் தன்னுடைய மகனை தீர்த்து கட்ட சுபாஷ் முடிவு செய்த நிலையில் மகன் வயல்வெளிக்கு சென்றபோது பின்னால் சென்ற சுபாஷ் மண்வெட்டியால் தனது மகனை தாக்கி கொலை செய்துள்ளார். பிறகு எதுவும் தெரியாதது போல வீட்டிற்கு வந்துள்ளார். மகனை அங்கும் இங்குமாக தேடுவது போல தேடிய இவர் பிறகு மகனை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். அன்றைய தினமே வயல்வெளியில் தனது மகன் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காட்டு விலங்கு அடித்து கொலை செய்திருக்கலாம் என்று சுபாஷ் கூறியதால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடல் மீது ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்கள் இருந்ததால் போலீசார் சுபாஷிடம் விசாரணை நடத்தியதில் மகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2001-ல் ரூ.50 லட்சம் கடனில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், இன்று ரூ.500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார். இது மக்களின் பணம்…
புதிய தொழிலில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக, தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு…
சின்னத்திரை நடிகை மன்யா ஆனந்த், நடிகர் தனுஷின் மேலாளர் ஸ்ரேயஸ் தன்னை ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக தொடர்புகொண்டு, ஒப்பந்தம் செய்ய…
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…