சாப்பாடு போட 5 நிமிஷம் லேட்…. விக்ரமாதித்தன் போல தலையை வெட்டி மரத்தில் மாட்டிய கொடூரன்… பீகாரில் அரங்கேறிய பயங்கரம்….!

By Nanthini on ஆடி 30, 2026

Spread the love

பீகார் மாநிலத்தில் உணவு பரிமாறுவதில் தாமதமானதால், ஆத்திரமடைந்த நபர் ஒருவர் தனது சகோதரரின் மனைவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் ஜகர்கன்ட் பகுதியில் தர்மேந்திர குமார் மற்றும் குனல் குமார் ஆகிய சகோதரர்கள் வசித்து வந்தனர். இதில் குனல் குமார் தீவிர மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மதுபோதையில் வீட்டிற்கு வந்த குனல் குமார், தனது சகோதரரின் மனைவியான அனுஷா தேவியிடம் (25) உணவு கேட்டுள்ளார். அப்போது சாப்பாடு பரிமாறுவதில் தாமதம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவானதாகக் கூறப்படுகிறது.

சாப்பாட்டிற்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டதால் கடும் ஆத்திரமடைந்த குனல் குமார், வீட்டில் இருந்த கோடாரியால் அனுஷா தேவியின் தலையில் பலமாக வெட்டி மிகக் கொடூரமாகக் கொலை செய்தார். அதோடு நிற்காமல், வெட்டப்பட்ட அவரது தலையை வீட்டின் முன்பிருந்த மரத்தில் தொங்கவிட்டுப் படுபாதகச் செயலில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், குற்றவாளி குனல் குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபோதையில் நடந்த இந்த மிருகத்தனமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.