மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள இரண்டு கோவில்களில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணம் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லட்கன்ஜ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மல்டக்கா பகுதியில் அமைந்துள்ள மாதா கோவில் மற்றும் சிவ கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, உண்டியலில் இருந்த ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கோவிலின் காவலாளி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தத் திருட்டுச் சம்பவத்தில், கொள்ளையடிப்பதற்கு முன்பு குற்றவாளி ஒருவர் தெய்வத்தின் முன்பு கைகளைக் கூப்பி, காதுகளைப் பிடித்து மன்னிப்புக் கேட்பது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பதிவுகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
