இதெல்லாம் ரொம்ப ஓவர்…. அம்மாவையும் மகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய நபர்… அமெரிக்காவில் நடந்த வினோத சம்பவம்…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு நிகழ்வு தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்படுகிறது. அமெரிக்காவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் 29 வயதான நிக் யார்டி என்ற ஆண், 44 வயது பெண்ணான டானி மற்றும் அவருடைய 22 வயது மகளை திருமணம் செய்துள்ளார். இதுதான் சமூகத்தின் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் தற்போது அம்மாவும் மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பிணிகளாக இருப்பது மேலும் சர்ச்சையை தூண்டியுள்ளது. ஜமைக்காவில் பிறந்த நிக் யார்டி தற்போது அமெரிக்காவில் பிரபலமான youtuber ஆக உள்ளார்.

அம்மா மகள் திருமணம்

   

இவருடைய சேனலை சுமார் 3.5 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு கஞ்சா வழக்கில் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த பிறகு தன்னுடைய youtube வாழ்க்கையை இவர் தொடங்கினார். தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அம்மா மற்றும் மகளுடன் அவர் போட்டோ சூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிர்ச்சி செய்தியாக பரவி பல கருத்துக்களை பெற்று வருகிறது. இந்த சம்பவம் கலாச்சாரம் மற்றும் சமூக நெறிமுறையை மீறும் வகையில் இருப்பதால் உலகம் முழுவதும் விவாதத்தை தூண்டியுள்ளது