கடைசி ஆசை… இந்து பெண்ணுக்கு இறுதி சடங்கு செய்த இஸ்லாமியர்… நெகிழ வைக்கும் வைரல் வீடியோ…!

By Nanthini on புரட்டாதி 16, 2025

Spread the love

சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் அரிய நிகழ்வு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே கடினம் குளத்தில் செயல்படும் கிறிஸ்தவ மறுவாழ்வு மையத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ராக்கி (44) என்ற இந்து மதத்தை சேர்ந்த பெண் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பு தன்னுடைய இறுதி ஆசையாக இந்து முறைப்படி சடங்கு நடைபெற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த கோரிக்கையை மதித்து கடினம் குளத்தை சேர்ந்த முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சபீர் என்ற நபர் தானாக முன்வந்து இந்துமத சடங்குகளுக்கு ஏற்ப அவருக்கு இறுதி சடங்கு செய்துள்ளார்.

இந்து பெண்ணின் சடங்கில் பங்கேற்பதற்கு என் மதம் ஒரு தடையல்ல என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். இந்த மனிதாபிமான செயலை பாராட்டி அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். சம்பவம் மத நல்லிணக்கம் மற்றும் மனிதநேயத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டாக சமூகத்தில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மதத்தை தாண்டி மனிதநேயத்தை முன்னிறுத்தும் இந்த சம்பவம் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .