“என்னையே கடிச்சிட்டியா”.. தன்னை கடித்த பாம்பை பையில் அடைத்துச் சென்ற நபர்.. பார்த்ததும் பகீர் கிளப்பும் வீடியோ..!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

பொதுவாகவே பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்பதை அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். பாம்புக்கு பயப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அவை அதிக விஷம் கொண்டவை என்பதால் பாம்புக்கு அனைவரும் பயந்து நடுங்குகின்றன. ஆனால் பாம்புகளை நாம் எந்த தொந்தரவும் செய்யும் வரை அவை நம்மை எதுவும் செய்யாது. அப்படி இருந்தாலும் பாம்பு என்றால் அனைவருக்கும் ஒரு விதமான அச்சம் தான் வரும். பெரும்பாலும் பாம்புகள் காட்டுப்பகுதிகளில் அதிகம் வாழும். ஆனால் தற்போது காடுகள் அதிகமாக அளிக்கப்படுவதால் மனிதர்கள் வாழும் இருப்பிடங்களுக்கு வந்து செல்கிறது. இதனால் மக்கள் தினமும் இது பற்றிய அச்சத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதுவும் காடு பக்கமாக உள்ள வீடுகளில் வாரத்திற்கு ஒரு நாளாவது பாம்புகளை காண முடிகிறது.

இப்படியான நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த ஒரு அதிசயமான சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது இளைஞர் ஒருவர், என்னை பாம்பு கடித்து விட்டது தயவுசெய்து உதவுங்கள் என்ற கதறலுடன் மருத்துவமனைக்குள் ஓடி வந்தார். அதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் தன்னுடைய பையில் பாம்பையும் கொண்டு வந்துள்ளார். மருத்துவர்கள் அதனைப் பார்த்ததும் சற்று நேரத்தில் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அந்தப் பையை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த விஷப்பாம்பு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தற்போது அது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.