கருப்பாக இருக்கேன்னு… யாரும் என்னை நேசிக்கல… கல்லூரி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவால் கதறும் பெற்றோர்..!!

By Soundarya on ஆனி 27, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் கிண்யா பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரேயா. 19 வயதான இவர் மங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரேயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெளியே சென்றிருந்த பெற்றோர் திரும்பி வந்து வீட்டில் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்ககூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இதற்கு இடையில் ஸ்ரேயா எழுதிய கடிதம் ஒன்று போலீசருக்கு கிடைத்துள்ளது. அதில் “கருப்பாக இருப்பதால் அனைவரும் கிண்டல் செய்கிறார்கள். என்னை யாரும் நேசிக்கவில்லை. நான் வாழ விரும்பவில்லை” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.