BREAKING: 3 MLA-க்கள் திடீர் ராஜினாமா?… முதல்வர் அவசர ஆலோசனை…!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூன்று பேர் ராஜினாமா செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ராமலிங்கம், வெங்கடேசன், ரமேஷ்பாபு ஆகியோர் தங்களுடைய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் இடம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதுச்சேரி அமைச்சரவையிலும் மாற்றம் செய்யப்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி முக்கிய ஆலோசனை நடத்தி வரும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.