சாலையோரம் கிடந்த சடலம்… முகத்தை சிதைத்து கொடூர கொலை… போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!

By Nanthini on மார்கழி 26, 2025

Spread the love

தூத்துக்குடியில் திருச்செந்தூர் ரோடு சத்தியநகர் உப்பளம் அருகே ஆண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவருக்கு சுமார் 45 வயது இருக்கும் என தெரிய வந்தது.

முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவர் யார், கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.