திருநங்கை வேடத்தில் புகுந்த போலி பூசாரி… பெண் விமானி பாலியல் வன்கொடுமை…. சிசிடிவியால் சிக்கிய அந்த ஒரு காட்சி…!

By Nanthini on ஆவணி 21, 2026

Spread the love

மும்பை பவாய் பகுதியில் பெண் விமானி ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து பணத்தைத் திருடிச் சென்ற அனில் ஷிண்டே என்பவரைப் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 19 அன்று, திருநங்கை மற்றும் பூசாரியைப் போலச் சேலை அணிந்து வந்த அனில் ஷிண்டே, குடியிருப்பு காவலாளியின் நம்பிக்கையைப் பெற்று அப்பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது கணவரைச் சிறப்புச் சடங்குகள் மூலம் குணப்படுத்துவதாகக் கூறி வீட்டிற்குள் சென்ற அவர், அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அவரிடமிருந்த 2,000 ரூபாயையும் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த உடனடி புகாரின் பேரில், சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சேலை அணிந்தபடி ஆட்டோவில் தப்பியோடிய குற்றவாளியின் வாகனப் பதிவு எண்ணை வைத்து, தானே மாவட்டம் கல்வா பகுதியில் பதுங்கியிருந்த அனில் ஷிண்டேவைக் கைது செய்தனர். காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், கைதான நபரின் குடும்பத்தினரும் இது போன்ற பல்வேறு மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.