காதல் மனைவிக்கு துரோகம்… அண்ணியுடன் தகாத உறவு… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மச்சான்கள்… கள்ளக்காதல் கொலையின் பகீர் பின்னணி…!!

By Gayathri on ஆவணி 21, 2026

Spread the love

செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகர் பகுதியில் வசித்து வந்த எலக்ட்ரீஷியன் ரத்தினவேல் பாண்டியன் என்பவர், நடுரோட்டில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 19.08.2026 அன்று வ.உ.சி தெருவில் உள்ள தனியார் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த இவரை, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து விரைந்து வந்த செங்குன்றம் காவல்துறையினர், ரத்தினவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் இந்த கொலைக்கான பகீர் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. ரத்தினவேல் பாண்டியன், பூர்ணிமா என்பவரை காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்துள்ளார். அதன்பிறகு, தனது மனைவியின் அண்ணியான சரண்யாவுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டு, அவருடன் கணவன் – மனைவியாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்ததோடு, தனது குடும்பத்தையும் பிரித்ததால் கடும் ஆத்திரமடைந்த பூர்ணிமாவின் அண்ணன் சரவணன், உறவினர்களுடன் சேர்ந்து பலமுறை எச்சரித்தும் ரத்தினவேல் கேட்காததால் அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது.

   

இதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்த சரவணன், தனது தம்பி தனசேகர் மற்றும் சித்தப்பா பழனிசாமி ஆகியோருடன் இணைந்து இந்த கொலையை அரங்கேற்றியுள்ளார். ரத்தினவேலை பின்தொடர்ந்து சென்று அவரது பைக்கை இடித்து கீழே தள்ளிய சரவணனும், பழனிசாமியும் அவரை கொடூரமாக வெட்டிக்கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு, வெளியூருக்கு தப்ப முயன்ற சரவணன், தனசேகர் மற்றும் பழனிசாமி ஆகிய மூவரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.