ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவியை, காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் (24) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு கேட்டரிங் பணிக்காக வந்த இடத்தில் சிறுமியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்ட இவர், சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி கொல்லிமலைப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொடுமைப்படுத்தியுள்ளார்.
சிறுமியைக் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கவுந்தப்பாடி காவல் துறையினர், கொல்லிமலையில் இருந்த சிறுமியை மீட்டு, செல்வராஜைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், குற்றவாளி செல்வராஜுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையுடன், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி சி. சொர்ணகுமார் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் உத்தரவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
