தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் டோல்பேட் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ரோகன் சிங் என்பவரின் வீட்டில் காவல்துறையினர் இன்று அதிரடியாக சோதனை நடக்கிறார்கள். அப்போது வீட்டின் பூஜை அறையில் இந்துமத சாமி புகைப்படங்களுக்குபின்புறமாக கஞ்சா பதிக்க வைக்கப்பட்டிருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளார்கள்.
பிறகு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் ரோகன் சிங்கை கைது செய்துள்ளார்கள். அவரிடம் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சாவை ஒடிசாவில் இருந்து கடத்தி வந்து ஹைதராபாத்தில் விற்பனைக்கு வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
