தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே கதாநாயகியாக இன்று கலக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் பேபி சாராவுக்கு தனி இடம் உண்டு. கடந்த 2011 ஆம் ஆண்டு தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரம் மகளாக நடித்து அசத்தியிருப்பார். அந்தத் திரைப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நிலாச் சோறு, சைவம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். அதன் பிறகு மலையாள மற்றும் தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த பேபி சாரா மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த நந்தினி கதாபாத்திரத்தின் சிறு வயது நந்தினியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் சாராவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது. அந்தப் படத்திலேயே ஒரு கதாநாயகி காண அனைத்து தகுதிகளும் இவருக்கு வந்து விட்டது என்று பலரும் பாராட்டினார்கள். அதன் பிறகு கொட்டேஷன் கேங் என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் பல காட்சிகளில் பேபிசாரா புகைபிடிப்பது போல இருந்தது. இந்த திரைப்படத்தில் பல விமர்சனங்களும் இருந்தது. இப்படியான நிலையில் தற்போது ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக சாரா அறிமுகமாக உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் தற்போது பாலிவுட்டில் ஹீரோயினியாக சாரா என்ட்ரி கொடுத்துள்ளார். 40 வயது நடிகரான ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 20 வயது சாரா கமிட் ஆகியுள்ளார். தற்போது இந்தச் செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
