அவன் தான் வேணுமா…? 29 வயது வாலிபருடன் 50 வயது பெண்… உல்லாசத்திற்கு அழைத்து கொன்று எரித்த கள்ளக்காதலன்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 25, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குப்பி தாலுகாவைச் சேர்ந்த லட்சுமி தேவம்மா (50) என்ற பெண், கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆழ்துளைக் கிணறு தோண்டும் தொழிலாளியான நாகராஜ் (55) என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இதனிடையே, லட்சுமி தேவம்மாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த நாகராஜ் அவரை ஆழ்துளைக் கிணறு தோண்டும் தோட்டம் ஒன்றிற்கு அழைத்துள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்த நிலையில், அந்த வாலிபர் குறித்து ஏற்பட்ட தகராறில், நாகராஜ் உருட்டுக்கட்டையால் லட்சுமி தேவம்மாவை அடித்துக் கொலை செய்துள்ளார்.

   

பின்னர் கொலையை மறைப்பதற்காக அவரது உடலைத் தோட்டத்தின் மறைவான பகுதிக்கு இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளார். மறுநாள் காலையில் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்த தோட்ட உரிமையாளர் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லட்சுமி தேவம்மாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிஸார், தலைமறைவாக இருந்த நாகராஜைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.