சென்னை ராயப்பேட்டை, பீட்டர்ஸ் சாலை மேம்பாலத்திற்குக் கீழே மாலை வேளையில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே வழியில் வந்த போதை ஆசாமி ஒருவர் அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண் கூச்சலிடவே, ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணின் கழுத்தைப் பிடித்துக் கீழே தள்ளி, பாலியல் தொல்லை கொடுத்துக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அண்ணாசாலை காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட சென்னை மயிலாப்பூர், அம்பேத்கர் பாலப் பகுதியைச் சேர்ந்த ரவுடி சதீஷ் (36) என்பவரைக் போலீசார் கைது செய்து, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
